கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்தி லேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

''உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது ஃபெட்எக்ஸ் (FedEx்), இபே (eBay), கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே (மீஙிணீஹ்) நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

''உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க' என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி
விகடன்

திருச்சிற்றம்பலம்! இதைச் சொல்லும்போதே நம் நினைவுக்கு வருவது சிதம்பரம். 'ஏடு தந்த தில்லையம்பதி' என தேவாரப் பாடல்கள் கிடைத்த தலம் இது எனப் போற்றுவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை எண்ணும்போதே, தனித்தீவென இருக்கும் பிச்சாவரமும், அங்கே உள்ள படகுப் பயணமும் நினைவில் நிழலாடும்!

தெற்கே வெள்ளந்தாங்கி அம்மன், மேற்கில் எல்லை அம்மன், வடக்கே தில்லைக்காளி, கிழக்கில் மாரியம்மன் ஆகியோர் நாற்புறமும் இருந்து சிதம்பரத்தைக் காப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜரையும் அவரின் அழகுத் திருமேனியையும் தரிசிக்காதவர்கள் மிகக் குறைவு! ஓங்கி உயர்ந்த கோபுரம்; பிரமாண்ட மண்டபங்கள்; நீண்ட பிராகாரங்கள் என காலங்கள் பல கடந்தும், கம்பீரமாக நிற்கும் ஆலயம்!
குங்குமத்தில் ஜொலிக்கும் தில்லைக்காளி!

நடனத்தில் நடராஜபெருமானிடம் தோற்றுப்போன காளி தேவி, இங்கே தில்லைக்காளியாக கோயில்கொண்டு இருக்கிறாள். நடராஜர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள அழகிய ஆலயம். இங்கு காளிதேவிக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வர். வேறு எந்த அபிஷேகமும் இல்லை. அபிஷேகம் முடிந்து, குங்குமக் காப்பில் அம்மனைக் காண கண்கோடி வேண்டும்.

இளமையாக்கினார்! கோயில்

ஸ்ரீநடராஜர் கோயிலின் மேற்கில், திருநீலகண்ட நாயனாருக்கு இளமையைத் தந்தருளிய சிவாலயம் அமைந்துள்ளது. இளமையாக்கினார் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்! கோயிலையும் தீர்த்தக் குளத்தையும் பார்த்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். இங்கே வந்து, சிவனாரை வழிபட, தீராத நோயும் தீரும்; நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடன் இளமை மாறாமல் வாழலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீஅனந்தீஸ்வரா! கோயில்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைச் சுற்றியுள்ள கோயில்களில் ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று. தெற்கு நோக்கி அமைந்துள்ள அழகிய கோயில்; ஆவுடையார்கோயிலைப் போன்ற அமைப்பைக் கொண்ட தலம்; ஸ்ரீபதஞ்சலி முனிவர் வழிபட்ட சிவாலயம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கீழ தெரு மாரியம்மன் கோயில்

ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு தென் கிழக்கில், கீழத்தெருவில், பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக் கோயில். இவளை தரிசித்து வழிபட, இழந்த பதவியைப் பெறலாம்; நிம்மதியுடன் வாழலாம் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீராகவேந்திரா கோயில்!

சிதம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது புவனகிரி. ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த பூமி என்பர். இங்கே, இவருக்கு அழகானதொரு ஆலயமும் உள்ளது.

சிதம்பரத்துக்கு மிக அருகில் உள்ளது வீராணம் ஏரி. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர். நாரைப் பறவை சிவனாரை பூஜித்து அருள்பெற்ற தலம்; நம்பியாண்டார் நம்பி அவதரித்த ஊர்; முக்கியமாக, பொள்ளாப்பிள்ளையார் அருள்பாலிக்கும் அழகிய ஆலயம் எனப் பெருமைகள் பல கொண்ட இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீசௌந்தரேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீதிரிபுரசுந்தரி.

திருநாரையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுமன்னார்கோவில். இங்கு ஸ்ரீமரகதவல்லித் தாயார் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவீரநாராயண பெருமாள். இதனால் இந்தப் பகுதி, வீரநாராயணபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், வீரநாராயணம் ஏரி என்பதே காலப் போக்கில் வீராணம் ஏரி என்று மருவியதாகவும் சொல்வர்.

காட்டுமன்னார்கோவிலில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருஓமம்புலியூர். இங்கு துயர்தீர்த்தநாதராக சிவபெருமானும், புஷ்பாம்பிகையாக அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.


இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கடம்பூர். கோயிலே தேர்போன்று காட்சி தரும் நுட்ப பிரமாண்டத்தைக் கண்டு ரசிக்கலாம். இங்கே குடிகொண்டிருக்கும் இறைவன் - ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். பிரதோஷ நாயகனாம் சிவனார், நந்தியின் மேல் நாட்டியம் ஆடும் கோலம், ஆலயத்தின் மற்றொரு சிறப்பு.

திருக்கடம்பூரில் இருந்து சிதம்பரம் வந்தடைந்து, அங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பயணித்தால் பரங்கிப்பேட்டையை அடையலாம். இங்குதான் மகா அவதார் பாபாஜிக்கு ஆலயம் உள்ளது. இவரை வணங்கி வழிபட்டால், யோகமும் ஞானமும் கிடைக்கும் என்கின் றனர் பக்தர்கள். தவிர, சித்ரகுப்தர் வழிபட்டு அருள் பெற்ற, ஸ்ரீஆதிமூலேஸ்வரர் திருக்கோயிலும் இங்கு அமைந்துள்ளது. சித்ரகுப்தருக்கு தனிச் சந்நிதி உள்ளது.

பிச்சாவரத்தில் படகுப் பயணத்தை அனுபவிப்பதோடு, அப்படியே சிதம்பரத்தைச் சுற்றியுள்ள தலங்களுக்கும் ஆன்மிகப் பயணம் செய்யுங்கள். உள்ளம் புத்துணர்வு பெறும்; ஆன்மா புண்ணியம் பெறும்!


நன்றி - பக்தி விகடன்

பெல்சியன் மான்ஸடர் வரலாறு

Originating in 19th century Belgium by crossing local cattle with British cattle, the Belgian Blue cattle are gigantic bovine wonders. Their enormous size and muscle mass, sometimes called "double muscling," is a naturally occurring mutation of the gene for myostatin, a protein that regulates muscle growth. This mutation results in accelerated lean muscle growth.

விடியோவில் பார்க்க இங்கே கிலிக்கவும்

இவன்

My photo
முதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இன்றய குறள்


Followers