ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது.

இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன

தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ்

அடா இ.யோனத்

ரைபோசோம்களின் முக்கியத்துவம்!

நமது உடலின் இயக்கத்துக்கு முக்கியப் பயங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உறுபத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய மகத்தான ஆராய்ச்சிகளுக்கே இம்மூவருக்கும் நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுடைய உயிரணுக்களுக்குள் மரபணு மூலக்கூறுகள் இருக்கும். அதன் மூலம் மனித இயக்கம் பற்றி அறிந்து கொள்ளலாம். மரபணுக்களின் தகவல்களின் அடிப்படையில் ரிபோசோம்களானது புரதத்தை உற்பத்தி செய்கின்றன. நமது உடலில் வெவ்வேறு வடிவமும் இயக்கமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உள்ளன. அவை நமது உடலின் வேதியியல் அளவை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

உயிரின் அடிப்படையை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு ரிபோசோம்கள்களின் இயக்கத்தை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயோடிக்ஸை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய இம்மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1952-ம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் 1971-ம் ஆண்டில் பரோடா பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். பின்னர், ஓகியோ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன், தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி. லெபாரட்டரி ஆஃப் மோல்குலர் பயாலஜியின் ஸ்ட்ரக்சுரல் ஸ்டடிஸ் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பற்றி மேலும் அறிய...
http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

வாழ்த்துகள் ஐயா...
அன்புடன்
சரவணன்.